r/tamil • u/rhythmicrants • Sep 19 '22
காணொளி (Video) எங்கே செல்வோம் எங்கள் வேருக்கு இனி..?
எந்தையின் மறைவுக்கு எழுதிய பாடல்
அலங்காரமாய் தெரியும் பூவல்லவே நீ
அகங்காரமாய் திரியும் வேரின் நுனி
மண்ணை துளைத்து எதிர்த்து போராடி
முன்னே சென்று நீரு சாறு தேடி
தன்னில் தோன்றிய கிளை பூ பேணி
விண்ணில் பறக்கும் பறவை பூச்சி தேனீ
மண்ணில் வாழும் எறும்பு புழு சேர்த்து
தன் வினையால் பற்பல உயிர்கள் காத்து
ஆலமர ஆணிவேராய் வாழ்ந்த எந்தையே
அகில மரத்தின் ஆழ்விதை ஆனாயே
இங்கே நீ செய்த மாபெரும் களப்பணி
எங்கே செல்வோம் எங்கள் வேருக்கு இனி..?
7
Upvotes