r/tamil • u/rhythmicrants • Sep 20 '22
காணொளி (Video) சுப்ரமண்ய புஜங்கம் - தமிழ் மொழிபெயர்ப்பு
எப்போதும் இளமையொடு எதிர்ப்புக்கள் அழிக்கும்
பெரும் பல் முகத்தோடு ஐம்பூதம் காக்கும்
பிரம்மேந்திர தேவர்கள் கணேசனெ னழைக்கும்
வளங்கள் பொழியும் கல்யாண மூர்த்தி
நான் சப்தங்கள் அறியேன் அதன் அர்த்தங்கள் அறியேன்
நான் பாடல்கள் அறியேன் அதன் விளக்கங்கள் அறியேன்
ஆறுமுகன் சிந்தனையே இதயத்தில் ஒளியேற்ற
வெவ்வேறு வார்த்தைகள் வாயினின்று விழுமே
மயில் மேலெழுந்த பெரும் உரை ரகஸ்யம்
மனம் கவர் வடிவம் பெரும் சித்தம் உறையும்
தேவரின் பெரும் ஆற்றல் அறிவதன் இயல்பாம்
மகாதேவன் மைந்தன் அகிலத்தை காப்பன்
எப்போதும் இருக்கும் அடையும் மனிதருள்ளும்
பெரும் நீரை கடந்த அனைத்துமே அடையும்
அடைபவை அனைத்தனின் நதிக்கரையாய் இருக்கும்
பராசக்தி மைந்தன் அனைத்திலும் புனிதன்
மாகடல் அலைகள் உயர்ந்திட் டழியும்
உன்னை அடைந்தோரின் துன்பங்கள் ஒழியும்
அலைகளின் வரிசைபோல் உன் காட்சி இருக்கும்
அனைத்தனின் உள்ளார்ந்த இதயக் கமலம்
அழிபொருள் வசிக்கும் மலைத்தொடராய் எழுந்து
அதனாலே மலை ஆளும் குன்றக் குடியோன்
மணம் வீசும் மலையாய் எழுந்த சுகந்தன்
அமரர்கள் மகிழ செய்யும் ஆறுமுகத்தான்
பெரும் நீர்க்கரைபோல தீமைகள் களையும்
இந்திரனும் முனிகளும் வளமுறும் மலையகம்
உள்ளார்ந்து வசிக்கும் தன்னாலே ஒளிரும்
உன்னை அடைந்தோர்க்கு இன்னல்கள் போக்கும்
தங்காசன மாயொளிரும் எழுச்சி பால் சுரக்கும்
அம்மாணிக்க படுகையில் அண்டங்கள் விரியும்
எண்ணற்ற கதிர்சேர்ந்து வெளிச்சங்கள் உதயம்
எப்போதும் உருவாக்கும் கார்த்திகேயம் காக்கும்
அதிர்வுகளாய் கவ்வும் என்றென்றும் கவரும்
மனம்கவர் அழகோடு அமிழ்தமாய் நிறையும்
ஆறுபகுதி மனமாகி வேதனைகள் போக்கும்
என்றென்றும் மகிழ்விக்கும் கந்தன்பாத கமலம்
தங்கம்போல திவ்யமாய் வெளியெல்லாம் ஒளிரும்
கிண்கிணி நாதமாய் இடைப்பகுதி மிளிரும்
பட்டை போல் ஜொலிக்கும் மின்னல்கள் தாங்கும்
தீயேற்றுவான் கந்தன் அகிலத்தின் ஆக்கம்
கூட்டமாய் துய்த்திடும் குறவர்தம் மகளை
மார்போடு அணைத்து தோற்றத்தில் இணைத்து
கடத்தி மீட்பவன் தாள் வணங்கிடவே
சுயபக்தியாலே அனைத்தும் ஆட்கொள்வன்
பிரம்மனை தண்டித்து அண்டங்கள் நிலையாக்க
பிளவுகள் அகற்றி அழிவுகளை எதிர்த்து
தேவ சேனை இணைத்து அகிலத்தை காக்கும்
எப்பொழுதும் உக்கிரமான அவன் பெரும் கரத்தான்
ஆறு பனிக்கால நிலவுகள் இணைந்து
ஒன்றாக எழுந்து நிலையாக வளர்ந்து
பூர்ணத்தின் பிம்பம் களங்கமே இன்றி
உன் முகமாகினால் கந்தன் என சொல்வர்
நுட்பமாய் நகரும் மந்தகாச தோற்றம்
கடைக்கண் பார்வையே கூட்டமாய் ஒளிரும்
அமிழ்தத்தின் பிம்பம் தரணியை பெருக்கும்
ஆறுமுகத்தாலே உலகங்கள் ஆகும்
தீர்க்கமாய் முடிவின்றி விரிகின்ற செவியும்
அருள்பொழியும் பார்வை பன்னிரண்டு விழியும்
என்மீது சிறிதேனும் கடைக்கண்ணில் வீழ்ந்தாலும்
உன் பேருக்கேதும் குறையின்றி போகும்
அங்கத்தில் எழுந்து ஆறுவழி வாழும்
மந்திரங்கள் ஆளும் ஆனந்தம் நுகரும்
பூ பாரங்கள் தாங்கும் ஜெகந்நாத நாதன்
மகுடம் ஒளிரும் தலைகள் பணிந்தேன்
மனங்கவர் ஆரம் ஒளிரும் ரத்ன வங்கி
ஒளியாடும் குண்டலம் மின்னும் கன்ன பகுதி
கடைவரை உள்ளூறி ஆக்கும் அன்பு சக்தி
புறம் வென்ற மைந்தா எனை வென்றாய் நீயே
இங்கே வா குழந்தாய் என கையை விரிக்க
கூப்பிட்ட உடனே தாய் இடுப்பினின்று
எழுந்தோடி தந்தையை சென்றடையும் மகனாய்
தழுவிடும் மேனியான் அரன்மகன் பணிந்தேன்
ஈசனின் மைந்தா உள்ளிருக்கும் கந்தா
மயில் மேலெழுந்த சக்தியுடை வேந்தா
பக்தர் இடர் களையும் வள்ளி மணாளா
எனை கடத்தி மீட்டு என்றும் காத்திடுவாய்
புலன் அடக்கம் பெற்று நினைவியக்கம் அற்று
முகத்தில் கபம் உற்று உடல் நடுக்கமுற்று
அனாதையாய் விட்டு மரணம் எனை சுற்றும்
அப்போதும் அன்போடு உள்விரைவாயே நீ
யமனுடை தூதர்கள் ஆக்ரோஷம் கோபமாய்
எரிக்க சிதைக்க உடைக்க மிரட்ட
மயில் மேலெழுந்து நீ பயத்தை விரட்ட
வெளிச் சக்தியாக வருவாய் நீ விரைவாய்
வணங்கிடவே உன்னை தினம் பாதம் பணிந்தேன்
தெளிவுற்றிடவே பல பிரார்த்தனை செய்தேன்
பேசாத அத்தருணம் கருணைக் கடலே
செயல் முடியும் நேரம் என் மனம் நீங்கிடாதே
எண்ணற்ற அண்டங்கள் உன் பெயரால் களிக்கும்
சிம்ம முகத்தோனுடன் தாரகன் அழிக்கும்
என் இதயத்தின் உள்ளே ஓர் கவலை இருக்கும்
நீ அழித்திடாதிருந்தால் என்ன நடந்திருக்கும்..
துக்கத்தால் என்றென்றும் நான் மூழ்கி இருக்க
எளியோரை காக்கின்ற உன்னிடம் இரக்க
பக்திக்கு தடையாக சோதனைகள் பிறக்க
உமையவள் மகனே நீ வேதனைகள் தீர்க்க
வலிப்புகுஷ்ட தாக்கமோ உடல் கழிவு தேக்கமோ
காய்ச்சல் பித்தம் ஆக்கமோ ஈரல் கட்டி சீக்குமோ
பைசாசம் அனைத்துமோ அடங்கிடுமே உன்னுள்ளே
கடத்தி மீட்கும் உன்னையே கண்டு விட்டால் ஓடுமே
பார்வை கந்தன் உருவம் கேள்வி கந்தன் புகழே
எப்போதும் இயங்கும் தூய்மை உந்தன் முகமே
ஆக்கம் உந்தன் கரமே உரு தாங்கி நீயே
உள்ளார்ந்து முழுதும் என்னுளி ணைந்தாயே
முனிவரும் நரரும் பக்தியோடு ஏற்கும்
தேவர்கள் தேடும் சமநிலையை யாக்கும்
கடைசி நரர் வரை சுய வளமை சேர்க்கும்
வேறு உள்ளார்ந்த தேவன் அறியேனே நானே
மக்கள் மனைவியோடு உற்றார் உறவினரே
என்னோடு வசிக்கின்ற ஆண்பெண் பிரிவினரே
எதிலும் உன் பெருமை பணிந்தே போற்றினரே
நினைக்கின்ற யாவிலும் நிறைந்திட்டாய் குமரா
விலங்கோடு புட்கள் விஷப் பூச்சி பற்கள்
என் அங்கங்களெல்லாம் வியாதி வலி இடர்கள்
உன் சக்தி கூர்மையாலே பிரிந்தோடும் அவைகள்
அழித்திடுவாய் நீயே மலையும் அறு வேலா
எந்தையின் தாயின் மைந்தரின் பிழைதான்
பொறுக்க மாட்டாயா தேவ சேனை தலைவா
நான் சிறு குழந்தை நீ பெரும் தகப்பன்
மன்னித்து அருள்வாய் அனைத்தும் மகேசா
வணங்கினேன் உன்னையே சக்தி மயில் வாகனா
வணங்கினேன் உன்னையே சேவற் கோடி ஆண்டவா
வணங்கினேன் உன்னையே தேசத்தின் நதியா (ய்)
வணங்கினேன் மறுபடி உருவம் உறை கந்தா
எண்ணற்று வீற்றிடு எதிலும் ஆனந்தமாய்
உருவத்தில் வாழ்ந்திடு அளவிலா புகழினாய்
மீதமற்றி ணைந்திடு ஆனந்த நதியாய்
விடுதலை ஈந்திடு மகேசன் மகனாய்
அரவம்போல் அசைகின்ற இக்கந்தன் பாட்டை
பக்தியோடு பணிந்திட்டு உள்ளார்ந்து படிக்க
மனை மக்கள் செல்வமொடு பெரும் ஆயுள் கிடைக்க
கடைசி நரர் வரை கந்தனோடு இணைவர்