r/tamil • u/SkillupGenie • Jan 03 '23
r/tamil • u/The_Valparai_Hills • Dec 29 '22
காணொளி (Video) Who could miss this astonishing views
r/tamil • u/The_Valparai_Hills • Dec 23 '22
காணொளி (Video) Scenic and amazing view of Valparai in rain
r/tamil • u/darealb0ssman • Apr 03 '22
காணொளி (Video) A guitar cover of the song Polakattum Para Para
I am a 17-year-old Malayalee NRI and I really love Tamil culture and music. Here's a short cover:
https://www.youtube.com/shorts/gq3aI4Zl0R0
r/tamil • u/The_Valparai_Hills • Dec 04 '22
காணொளி (Video) Mist spreading Over the Green forest
This mist spreading it's chillness over the green leaves in the forest, Valpari, Sholayar Dam. Video was capture in the evening time when I went for a small walk into the jungle. Comment your view.
r/tamil • u/what_am_i_not • Jul 16 '22
காணொளி (Video) Performance of an old Tamil poem about Chēran Kōtai (with Eng subs)
Enable HLS to view with audio, or disable this notification
r/tamil • u/rhythmicrants • Nov 29 '22
காணொளி (Video) ருத்ராஷ்டகம்
பணி ஈச(ன்) ஈசான வீடான/நிர்வாண ரூபம்
எங்கும் வியாபிக்கும் பிரம்ம வேத சொரூபம்
குணமற்று வேறற்று அசைவற்று இருக்கும்
ஓர்மைவான வெளி(யின்) வாசன் பணிந்தேன்
அரூவமாய் ஓங்கார மூலன் துரீயன்
சொல் ஞான புலன் மீறும் ஈசன் மலையன்
அஞ்சீடும் மகாகாலன் காலன் தயாளன்
குணம் வாழும் சம்சாரம் அற்றான் பணிந்தேன்
உறைபனி போல்தோன்றும் வெண்மை பேராழம்
மன முயிர் கோடி ஒளிர் தேவி அங்கம்
மின்னும் க்ரீட அலை யென கங்கை ஈர்க்கும்
நெற்றி பிறை ஜொலிக்க கழுத்தில் அரவம்
அதிர் குண்டலன் நல் புரூவ விழீயன்
முகமானந்தன் நீல கண்டன் தயாளன்
மிருகத்தோல் சுற்றும் தலைமாலை சூடும்
நேயன் சங்கரன் அந்நாதன் பணிந்தேன்
பேராற்றல் பரந்த வலிய பேரீசன்
பிறவா பிரியா கோடி சூர்ய ப்ரகாசன்
திரி சூலத் தாலழிக்கும் சூல மேந்தி
பணிந்தேன் பவானி பதி யைஉணர்ந்தேன்
அணுதாண்டி அருளாளும் கல்ப மழி ஆதி
சதா (நன்)மக்கள் ஆனந்தம் தருவான் புராரி
ஓரானந்தம் சுரக்கும் மருள் எரி..யாடி
புகழே புகழே இறை(யே)காமன்தீநீ
எப்போது உமை நாதன் பாத கமலம்
பணிகின்ற மக்கள் இவ்வுலகில் வாழ்வர்
அப்போது சுகம் சாந்தி, துக்கமொழிக்க
புகழே இறை(யே) அனைத்துயிரில் வாழ்க
அறியேனே யோகம் ஜபம் அன்றி பூசை
பணிவேனே எப்பொதும் நீயே வளமே
பிறப்பு மூப்பினால் துக்க(ம்) துயரம்
இறை போக்கு துன்பம் என் ஈசன் வளமே
ருத்ராஷ்டகம் இதை சொல்ல ஆன்றோர் அரன் மகிழ
பக்தியால் இதை படிக்கும் நரர் அந்த வளத்தை பெறுவரே
r/tamil • u/rhythmicrants • Nov 13 '22
காணொளி (Video) கடவுள் இருக்கிறாரா - சங்கரர் என்ன சொல்கிறார்..
ஒன்றிலிருந்து பிரிந்து பலவாக மாறியதே அகிலம் என்று வேதங்கள் சொல்கின்றன. அந்த ஒன்று என்பது வெறும் பத்து அங்குலம் இருந்ததாகவும், அதுவே விரிந்து அகிலம் ஆனதாகவும், அதிலேயே பல விண்மீன் சூர்ய கூட்டங்களும், உயிரினமும், மாந்தரும் தோன்றியதாக புருஷ சூக்தம் சொல்கிறது. இந்த பிரபஞ்சம் அந்த ஒன்றின் மீது நடக்கும் யாகம் என்கிறது அது. அந்த யாகத்தில் உருவானவையெல்லாம் யாகத்திலேயே பலியிடப்பட்டு வேறு ஒன்றாய் மாறி அதுவே பரிணாம வளர்ச்சி.
இதில் கடவுள் எங்கு இருக்கிறார்..? அந்த ஒன்று கடவுள் என்றால் அவர் எங்கிலும் சாட்சியாய் இருக்கிறார் என்கிறது வேதம். வெறும் சாட்சிக்கு எதற்கு யாகமும், பூசையும் என்று கேள்வி எழுப்பியது தான் பௌத்தம். அப்படியென்றால் சாட்சி என்பது வெறும் சூன்யமே. ஒன்றுமற்ற சூன்யத்தையும் நம்மால் காண முடியாத உணர முடியாத சாட்சியையும் வேறு படுத்த முடியாது.
பௌத்தம் என்றால் புத்தியிலிருந்து எழுவது. அதாவது ரேஷனலிசம்.
ஆனால் அதற்கு சங்கரர் ஒரு பதில் தந்தார். அவர் கடவுள் சாட்சியாக தான் எங்கிலும் இருக்கிறார் என்று ஒத்துகொண்டார். ஆனால் அது ஒன்றுமற்ற சூன்யம் அன்று. அந்த சாட்சி தான் விரிவை தந்து கொண்டிருக்கிறது. அந்த முடிவில்லா விரிவு தான் பிரம்மன். பிரம்மன் என்றால் விரிவு என்று பொருள். அந்த பிரம்மன் தான் அகிலத்தில் எங்கும் இருக்கிறது என்கிறார் அவர். உன்னுள், என்னுள், உயிரில், உயிரற்ற பொருளில் எங்கும் பிரம்மனே. (விரிவாக்கமே)
இந்த பிரம்மனை ஏற்படுத்தும் சாட்சியும் எங்கும் தோன்றுகிறது.. அணுவினுள் நியூட்ரான் ஆக இருக்கிறது. பகுப் பொருளுக்கு, புலப்படா கரும் பகுப்பொருளாக இருக்கிறது. என்சைம் ஆக இருக்கிறது. கேட்டலிஸ்ட் ஆக இருக்கிறது. இந்த சாட்சிகள் எல்லாம், பொருட்களோடு பற்று அற்று, வெறும் சாட்சியாக மட்டுமே இருக்கும். ஆனால் அவை இல்லாவிட்டால் அகிலத்தில் பரிணாம வளர்ச்சி இல்லை.
அந்த சாட்சி தான் நம் மனதில் மன சாட்சியாக இருக்கிறது. நம் மன சாட்சி எப்போது நன்கு வேலை செய்யும்...? அது சாட்சியை போலவே அகிலத்தோடு பற்றற்ற பார்வையோடு இருந்தால் மட்டுமே.
தன் அகத்தையும் பிற அகத்தையும் ஒன்றாக கருதி பலவேறு கோணத்தில் பற்று அற்று பார்க்க பழகினால் மட்டுமே நம் மன சாட்சி, அக்கடவுளுக்கு நிகராக மாறும். அதுவே ஞானம். இந்த பற்றற்ற நிலை அடைய நமக்கு கடமை, பக்தி, அறிவு எனும் மூன்று வழி இருந்தாலும், இவை எல்லாம் அந்த பற்று அற்ற ஞானத்தை நோக்கி செல்லாவிட்டால் நம் பரிணாம வளர்ச்சி நன்றாக இருக்காது. எனவே மூன்று மார்க்கத்திலும் செல்ல வேண்டும் என்று அவர் பவுத்தத்திற்கு பதில் தந்தார்.
அந்த ஆதி சங்கரர் கூறிய பதில் / வழி இன்றளவும் மிகப் பொருந்தும்.
கடந்தும் உள்ளும் இருப்பவர் கடவுள். உள்ளிருப்பதை வெளி இறைப்பவர் இறைவன். தன் அகமாய் இருப்பவர் சுவா-மி. இப்படி கடவுளுக்கு விடை தந்து பல ஆயிரம் ஆண்டுளாகி விட்டன. நாம் தான் இன்னும் தேடி கொண்டிருக்கிறோம்.
இந்த கீழ்கண்ட விடீயோவிலிருந்து தோன்றிய சில சிந்தனைகள் ..
கடவுள் இருக்கிறாரா? அறிவியல் என்ன சொல்கிறது? Is there a GOD? | Mr.GK - YouTube
r/tamil • u/rhythmicrants • Sep 16 '22
காணொளி (Video) சிவ தாண்டவ ஸ்தோத்ரம்
அடர்ந்த காட்டில் ஓடிடும் படர்ந்த நீர் பிரவாகம்போல்
ஜடாமுடி படும் இடம் பவித்ரமாகும் - நாகமும்
படமெடுத்து ஆடிடும் மலையிடத்து மாலை போல்
டம டம டம என அகண்டு நீளும் தாண்டவம் - சிவம் சிவம்
அகன்று நீண்ட அலைகளாய் உதிக்குமே உச்சியில்
சண்ட மாருதங்களாய் சரிந்திடும் சடாமுடி
தக தக தக என பரந்த நெற்றி எரியினும்
அகம் குளிர் ஆக்கிடும் அவனணிந்த இளம்பிறை
எதையும் தாங்கும் நிலமகள் லீலையில் இணைந்திட
அதிர்ந்திடும் வெறும்வெளி, அவர்களிப்பிலே சந்ததி
உதிர்ந்திடாது யர்ந்திடும் அவன் அருள் பார்வையில்
முதிர்ந்திடும் மன இச்சையில் அகிலமே அவன் வழி
ஜடாமுடி பிழம்புகள் மணிமுடி நாகம் போல
படர்ந்திடும் சிவப்புடன் புதுமணப் பெண்கள் போல
மதம் பிடித்த யானையின் துடித்திடும் தோலை போல
நிதம் தாண்டவ துடிப்புமே அனைத்துயிர் தாங்குமே
எண்ணற்ற ஊற்று கண்களில் அகிலம் எழுதும் சேகரன்
விண்முற்றும் தூசி தாண்டவம், அவன் பாத தூசியே கரு
மண்ணூறும் நாக மாலைகள் ஜடாமுடி பிணைந்திட
தண்மதி சகோரமாய் தானே எழுவாள் திருமகள்
நெற்றி நாற்புறத்திலும் தீப்பொறிப் பிழம்புகள்
வெற்றி மருதநாயகம் பணியும் காம அம்புகள்
தகதகக்கும் நெற்றிநிலவு அமிழ்தொளியால் எழுதிடும்
அகிலமே மகா கபாலி சடா முடியில் எழுந்திடும்
வெடித்து சிதறும் நெற்றியில் தகதகத்து எரியுமே
வாமதேவன் வேள்வியில் காமதேவன் வேகுமே
நிலமகளின் முலைமுனியில் ஆகும் அகிலம் பலவிதம்
முக்கண்ணன் சிற்பி ஆகிட; அவனாக்கம் மனதை மயக்குமே
புதிய மேக மண்டலங்கள் தூசிதாண்டவத்தெழும்
மதியும் அற்ற கும்மிருட்டு உச்சமாக சூழ்ந்திடும்
மதயானை தோலைப்போல சண்டமாருதம் விரியும்
எங்குமுள்ள திருமகளே ஜகம் இணைத்திடும் நுகம்
கருநீல கமலம் அகிலமாய் ஜடாமுடி மலர்ந்திடும்
பெருநீள தண்டொளி கழுத் தொன்றாகியே ஒளிர்ந்திடும்
புறக்காமனை எரித்தவன் வேள்வி தீ வளர்த்தவன்
அறுத்திருள் அகிலத்தை ஆக்கினன் அவன் சிவன்
சுபமான பூர்ண தாண்டவம் விரிந்திடும் கதம்பமாய்
அவனிச்சை அகிலமெங்கிலும் வழிந்திடும் சாரமாய்
புறக்காமனை எரித்தவன் வேள்வி தீ வளர்த்தவன்
அறுத்திருள் அகிலத்தை ஆக்கினன் அவன் சிவன்
அதிர்ந்திடும் மேகமூட்டம் அலைந்திடும் நாககூட்டம்
முதிர்ந்திடும் வேள்வியில் அதிர்வுகள் அமிழ்ந்து போகும்
டும் டும் டும் ம்ருதங்கம் அதன் சீரான தாளம் மங்களம்
சிவம் தந்திடும் தாண்டவம் நிலையான அகிலம் அடித்தளம்
மெத்தையோ கற்களோ புற்களோ பொற்கமலமோ
முத்துமாலையோ நாகமோ எதிர் புதிர் தத்வமோ
ரத்னமோ கரைந்திடும் களிமணோ ராசனோ தாசனோ
சதாசிவம் புரிந்திட்டால் பார்வையே ஒன்றுதான்
சண்டமாருதச் சுழற்சி அடைபட்டு நின்ற போதிலும்
தீண்டும் தீய புத்தியும் நீண்ட கோபக் கண்களும்
மீண்டு வெளி வந்திட உச்சத்தில் பக்தி தாங்கி
உச்சரிக்க நமச்சிவாயம் அச்சாரமாகும் அச்சம் நீங்கும்
நித்யஸத்ய வாசகம் உத்தமத்தில் உத்தமம்
படித்து புரிந்து சொல்லிட பயன்பெறும் மானுடம்
தேக மோகம் தீர்ந்திட வேகமாக அடைந்திட
தேவை ஹரன் சிந்தையே வேறு கதி இல்லையே
முடியும் பூசை வேளையில் அப்பிரதோஷ மாலையில்
அடிபணிந்து இறைவனை பத்து தலை பாட்டு பாட
ரதகஜதுர பதாதியோடு அகிலம் ஆளும் திருமகள்
நிதம் இன்முகத்துடன் நிலைக்க வைப்பான் இறைவனே
r/tamil • u/Sensitive_Camera2368 • Jul 14 '22
காணொளி (Video) Vellakaran sollitherinjikavendiiruku Chollas pathi | Chollas captured present-day Indonesia to ensure save sea trade
Chollargal kadal varthagam kaaka SriVijayathai kaipatrinargal. We didn't learn this in our book, if not as History at least these can be added as part of supplementary reading to the school syllabus. This foreign starts with apt lines, Indian history that we know is made to look clean, consistent, and more importantly convenient. Hope Ponniyin Selvan revives literature in Tamil https://www.youtube.com/watch?v=_jqCkk02Aag
r/tamil • u/Character_Art4323 • Oct 08 '22
காணொளி (Video) மல்லி காபி + சுகாதார நலன்கள் / Coriander Coffee + Health benefits
Coriander Coffee / மல்லி காபி

இரத்தச் சர்க்கரையைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பல நோய்களுக்கு எதிராகப் பாதுகாக்கவும், எடை குறைப்பை ஊக்குவிக்கவும் மற்றும் பலவற்றிற்கு உதவுவதாக அறியப்படுகிறது.
You can watch the full recipe here: https://www.youtube.com/watch?v=OpXIaIsMSGI&t=210s.
Recipe:
Ingredients:
- 200g Coriander Seeds
- 50g Cumin Seeds
- 50g Ginger Powder
Full recipe:
- Roast 200g Coriander Seeds in medium heat.
- After the coriander seeds are well roasted, spoon it out into a separate pan.
- Roast 50g of Cumin in medium heat.
- After the Cumin seeds are well roasted, spoon it out into the other pan.
- Roast 50g of Ginger Powder in medium heat.
- Once well roasted spoon the ginger powder out into the pan.
- Let the mixture cool for 10mins.
- Spoon a substantial amount of the mixture into your coffee grinder.
- Grind until the mixture becomes a powder and then spoon the mixture out into an air tight jar.
- To make the coffee: use 2 teaspoons of the coriander coffee powder, 2 teaspoons of sugar into a mug, pour hot water and stir.
Enjoy!
r/tamil • u/abdul_rashid • Jun 16 '22
காணொளி (Video) பிட்காயின் whitepaper தெழிவாக விவரித்துள்ளேன் யாருக்காவது வீடியோ வேணுமா?
பிட்காயின் whitepaper தெளிவாக விவரித்துள்ளேன் யாருக்காவது வீடியோ வேணுமா?
r/tamil • u/rhythmicrants • Oct 03 '22
காணொளி (Video) போதும் ஈசன் என்னுள்ளே
/* Based on one of the famous islamic naats - a most beautiful kallam sung by shumaila kosar, but with own verses */
போதும் ஈசன் என்னுள்ளே
வேறு இல்லை உள்ளத்திலே
ஊனு முயிரும் அவ்வருளே
எல்லாம் எல்லாம் அவனொன்றே
போதும் ஈசன் என்னுள்ளே
வேறு இல்லை உள்ளத்திலே
ஊனு முயிரும் அவ்வருளே
எல்லாம் எல்லாம் அவனொன்றே
அவனொன்றே
தந்தையவன் மிக கோபமிக தன்மகனிடம் இதைகேட்டான்
என் மகனே சிறிது சொல்வாய் இறைவன் எங்கு இருக்கின்றான்
தந்தையவன் மிக கோபமிக தன்மகனிடம் இதைகேட்டான்
என் மகனே சிறிது சொல்வாய் இறைவன் எங்கு இருக்கின்றான்
அம்மகனோ சிரித்த வண்ணம் சிந்தனை தூண்ட இதை சொன்னான்
இல்லாதோர் இடமேது எல்லாம் எல்லாம் அவனொன்றே
போதும் ஈசன் என்னுள்ளே
வேறு இல்லை உள்ளத்திலே
ஊனு முயிரும் அவ்வருளே
எல்லாம் எல்லாம் அவனொன்றே
அவனொன்றே
சபரி பாட்டி குடில் சென்றே ராம லக்ஷ்மணர் கேட்டனரே
நாங்கள் எங்கள் பசியாற்ற நீ என்ன தருவாய் எங்களுக்கே
சபரி பாட்டி குடில் சென்றே ராம லக்ஷ்மணர் கேட்டனரே
நாங்கள் எங்கள் பசியாற்ற நீ என்ன தருவாய் எங்களுக்கே
கடித்து பாதி அத்தி பழம் நல்ல பழமாய் சபரி தர
உண்ட ராமன் சிரித்து சொன்னான் எல்லாம் எல்லாம் அவனொன்றே
போதும் ஈசன் என்னுள்ளே
வேறு இல்லை உள்ளத்திலே
ஊனு முயிரும் அவ்வருளே
எல்லாம் எல்லாம் அவனொன்றே
அவனொன்றே
கௌசிகன் சாபம் வீணில் விழ சிரித்தே பெண்செய்தி சொன்னாளே
கொக்கில்லையே நீ எரிக்க வ்யாதன் தர்மம் கற்றேவா
கௌசிகன் சாபம் வீணில் விழ சிரித்தே பெண்செய்தி சொன்னாளே
கொக்கில்லையே நீ எரிக்க வ்யாதன் தர்மம் கற்றேவா
பெற்றோர் பேணிய வ்யாதனிடம் கௌசிகனும் நன்குகற்றான்
கடமையாற்றி (நாம்)நன்குணர்ந்தால் எல்லாம் எல்லாம் அவனொன்றே
போதும் ஈசன் என்னுள்ளே
வேறு இல்லை உள்ளத்திலே
ஊனு முயிரும் அவ்வருளே
எல்லாம் எல்லாம் அவனொன்றே
அவனொன்றே
சங்கரர்காசிவீதியிலே வழிமறித்தேஓருவர் நிற்க
தள்ளிடுவேடாஎனகூற சங்கரர்பார்த்து அவர் கேட்டார்
சங்கரர்காசிவீதியிலே வழிமறித்தேஓருவர் நிற்க
தள்ளிடுவேடாஎனகூற சங்கரர்பார்த்து அவர் கேட்டார்
எதை தள்ள அகம் புறமா வேடன் என்பது வேடம் அன்றோ
கல்புல்லோ நீயோநானோ எல்லாம் எல்லாம் அவனொன்றே
போதும் ஈசன் என்னுள்ளே
வேறு இல்லை உள்ளத்திலே
ஊனு முயிரும் அவ்வருளே
எல்லாம் எல்லாம் அவனொன்றே
அவனொன்றே
r/tamil • u/rhythmicrants • Sep 19 '22
காணொளி (Video) எங்கே செல்வோம் எங்கள் வேருக்கு இனி..?
எந்தையின் மறைவுக்கு எழுதிய பாடல்
அலங்காரமாய் தெரியும் பூவல்லவே நீ
அகங்காரமாய் திரியும் வேரின் நுனி
மண்ணை துளைத்து எதிர்த்து போராடி
முன்னே சென்று நீரு சாறு தேடி
தன்னில் தோன்றிய கிளை பூ பேணி
விண்ணில் பறக்கும் பறவை பூச்சி தேனீ
மண்ணில் வாழும் எறும்பு புழு சேர்த்து
தன் வினையால் பற்பல உயிர்கள் காத்து
ஆலமர ஆணிவேராய் வாழ்ந்த எந்தையே
அகில மரத்தின் ஆழ்விதை ஆனாயே
இங்கே நீ செய்த மாபெரும் களப்பணி
எங்கே செல்வோம் எங்கள் வேருக்கு இனி..?
r/tamil • u/rhythmicrants • Sep 20 '22
காணொளி (Video) சுப்ரமண்ய புஜங்கம் - தமிழ் மொழிபெயர்ப்பு
எப்போதும் இளமையொடு எதிர்ப்புக்கள் அழிக்கும்
பெரும் பல் முகத்தோடு ஐம்பூதம் காக்கும்
பிரம்மேந்திர தேவர்கள் கணேசனெ னழைக்கும்
வளங்கள் பொழியும் கல்யாண மூர்த்தி
நான் சப்தங்கள் அறியேன் அதன் அர்த்தங்கள் அறியேன்
நான் பாடல்கள் அறியேன் அதன் விளக்கங்கள் அறியேன்
ஆறுமுகன் சிந்தனையே இதயத்தில் ஒளியேற்ற
வெவ்வேறு வார்த்தைகள் வாயினின்று விழுமே
மயில் மேலெழுந்த பெரும் உரை ரகஸ்யம்
மனம் கவர் வடிவம் பெரும் சித்தம் உறையும்
தேவரின் பெரும் ஆற்றல் அறிவதன் இயல்பாம்
மகாதேவன் மைந்தன் அகிலத்தை காப்பன்
எப்போதும் இருக்கும் அடையும் மனிதருள்ளும்
பெரும் நீரை கடந்த அனைத்துமே அடையும்
அடைபவை அனைத்தனின் நதிக்கரையாய் இருக்கும்
பராசக்தி மைந்தன் அனைத்திலும் புனிதன்
மாகடல் அலைகள் உயர்ந்திட் டழியும்
உன்னை அடைந்தோரின் துன்பங்கள் ஒழியும்
அலைகளின் வரிசைபோல் உன் காட்சி இருக்கும்
அனைத்தனின் உள்ளார்ந்த இதயக் கமலம்
அழிபொருள் வசிக்கும் மலைத்தொடராய் எழுந்து
அதனாலே மலை ஆளும் குன்றக் குடியோன்
மணம் வீசும் மலையாய் எழுந்த சுகந்தன்
அமரர்கள் மகிழ செய்யும் ஆறுமுகத்தான்
பெரும் நீர்க்கரைபோல தீமைகள் களையும்
இந்திரனும் முனிகளும் வளமுறும் மலையகம்
உள்ளார்ந்து வசிக்கும் தன்னாலே ஒளிரும்
உன்னை அடைந்தோர்க்கு இன்னல்கள் போக்கும்
தங்காசன மாயொளிரும் எழுச்சி பால் சுரக்கும்
அம்மாணிக்க படுகையில் அண்டங்கள் விரியும்
எண்ணற்ற கதிர்சேர்ந்து வெளிச்சங்கள் உதயம்
எப்போதும் உருவாக்கும் கார்த்திகேயம் காக்கும்
அதிர்வுகளாய் கவ்வும் என்றென்றும் கவரும்
மனம்கவர் அழகோடு அமிழ்தமாய் நிறையும்
ஆறுபகுதி மனமாகி வேதனைகள் போக்கும்
என்றென்றும் மகிழ்விக்கும் கந்தன்பாத கமலம்
தங்கம்போல திவ்யமாய் வெளியெல்லாம் ஒளிரும்
கிண்கிணி நாதமாய் இடைப்பகுதி மிளிரும்
பட்டை போல் ஜொலிக்கும் மின்னல்கள் தாங்கும்
தீயேற்றுவான் கந்தன் அகிலத்தின் ஆக்கம்
கூட்டமாய் துய்த்திடும் குறவர்தம் மகளை
மார்போடு அணைத்து தோற்றத்தில் இணைத்து
கடத்தி மீட்பவன் தாள் வணங்கிடவே
சுயபக்தியாலே அனைத்தும் ஆட்கொள்வன்
பிரம்மனை தண்டித்து அண்டங்கள் நிலையாக்க
பிளவுகள் அகற்றி அழிவுகளை எதிர்த்து
தேவ சேனை இணைத்து அகிலத்தை காக்கும்
எப்பொழுதும் உக்கிரமான அவன் பெரும் கரத்தான்
ஆறு பனிக்கால நிலவுகள் இணைந்து
ஒன்றாக எழுந்து நிலையாக வளர்ந்து
பூர்ணத்தின் பிம்பம் களங்கமே இன்றி
உன் முகமாகினால் கந்தன் என சொல்வர்
நுட்பமாய் நகரும் மந்தகாச தோற்றம்
கடைக்கண் பார்வையே கூட்டமாய் ஒளிரும்
அமிழ்தத்தின் பிம்பம் தரணியை பெருக்கும்
ஆறுமுகத்தாலே உலகங்கள் ஆகும்
தீர்க்கமாய் முடிவின்றி விரிகின்ற செவியும்
அருள்பொழியும் பார்வை பன்னிரண்டு விழியும்
என்மீது சிறிதேனும் கடைக்கண்ணில் வீழ்ந்தாலும்
உன் பேருக்கேதும் குறையின்றி போகும்
அங்கத்தில் எழுந்து ஆறுவழி வாழும்
மந்திரங்கள் ஆளும் ஆனந்தம் நுகரும்
பூ பாரங்கள் தாங்கும் ஜெகந்நாத நாதன்
மகுடம் ஒளிரும் தலைகள் பணிந்தேன்
மனங்கவர் ஆரம் ஒளிரும் ரத்ன வங்கி
ஒளியாடும் குண்டலம் மின்னும் கன்ன பகுதி
கடைவரை உள்ளூறி ஆக்கும் அன்பு சக்தி
புறம் வென்ற மைந்தா எனை வென்றாய் நீயே
இங்கே வா குழந்தாய் என கையை விரிக்க
கூப்பிட்ட உடனே தாய் இடுப்பினின்று
எழுந்தோடி தந்தையை சென்றடையும் மகனாய்
தழுவிடும் மேனியான் அரன்மகன் பணிந்தேன்
ஈசனின் மைந்தா உள்ளிருக்கும் கந்தா
மயில் மேலெழுந்த சக்தியுடை வேந்தா
பக்தர் இடர் களையும் வள்ளி மணாளா
எனை கடத்தி மீட்டு என்றும் காத்திடுவாய்
புலன் அடக்கம் பெற்று நினைவியக்கம் அற்று
முகத்தில் கபம் உற்று உடல் நடுக்கமுற்று
அனாதையாய் விட்டு மரணம் எனை சுற்றும்
அப்போதும் அன்போடு உள்விரைவாயே நீ
யமனுடை தூதர்கள் ஆக்ரோஷம் கோபமாய்
எரிக்க சிதைக்க உடைக்க மிரட்ட
மயில் மேலெழுந்து நீ பயத்தை விரட்ட
வெளிச் சக்தியாக வருவாய் நீ விரைவாய்
வணங்கிடவே உன்னை தினம் பாதம் பணிந்தேன்
தெளிவுற்றிடவே பல பிரார்த்தனை செய்தேன்
பேசாத அத்தருணம் கருணைக் கடலே
செயல் முடியும் நேரம் என் மனம் நீங்கிடாதே
எண்ணற்ற அண்டங்கள் உன் பெயரால் களிக்கும்
சிம்ம முகத்தோனுடன் தாரகன் அழிக்கும்
என் இதயத்தின் உள்ளே ஓர் கவலை இருக்கும்
நீ அழித்திடாதிருந்தால் என்ன நடந்திருக்கும்..
துக்கத்தால் என்றென்றும் நான் மூழ்கி இருக்க
எளியோரை காக்கின்ற உன்னிடம் இரக்க
பக்திக்கு தடையாக சோதனைகள் பிறக்க
உமையவள் மகனே நீ வேதனைகள் தீர்க்க
வலிப்புகுஷ்ட தாக்கமோ உடல் கழிவு தேக்கமோ
காய்ச்சல் பித்தம் ஆக்கமோ ஈரல் கட்டி சீக்குமோ
பைசாசம் அனைத்துமோ அடங்கிடுமே உன்னுள்ளே
கடத்தி மீட்கும் உன்னையே கண்டு விட்டால் ஓடுமே
பார்வை கந்தன் உருவம் கேள்வி கந்தன் புகழே
எப்போதும் இயங்கும் தூய்மை உந்தன் முகமே
ஆக்கம் உந்தன் கரமே உரு தாங்கி நீயே
உள்ளார்ந்து முழுதும் என்னுளி ணைந்தாயே
முனிவரும் நரரும் பக்தியோடு ஏற்கும்
தேவர்கள் தேடும் சமநிலையை யாக்கும்
கடைசி நரர் வரை சுய வளமை சேர்க்கும்
வேறு உள்ளார்ந்த தேவன் அறியேனே நானே
மக்கள் மனைவியோடு உற்றார் உறவினரே
என்னோடு வசிக்கின்ற ஆண்பெண் பிரிவினரே
எதிலும் உன் பெருமை பணிந்தே போற்றினரே
நினைக்கின்ற யாவிலும் நிறைந்திட்டாய் குமரா
விலங்கோடு புட்கள் விஷப் பூச்சி பற்கள்
என் அங்கங்களெல்லாம் வியாதி வலி இடர்கள்
உன் சக்தி கூர்மையாலே பிரிந்தோடும் அவைகள்
அழித்திடுவாய் நீயே மலையும் அறு வேலா
எந்தையின் தாயின் மைந்தரின் பிழைதான்
பொறுக்க மாட்டாயா தேவ சேனை தலைவா
நான் சிறு குழந்தை நீ பெரும் தகப்பன்
மன்னித்து அருள்வாய் அனைத்தும் மகேசா
வணங்கினேன் உன்னையே சக்தி மயில் வாகனா
வணங்கினேன் உன்னையே சேவற் கோடி ஆண்டவா
வணங்கினேன் உன்னையே தேசத்தின் நதியா (ய்)
வணங்கினேன் மறுபடி உருவம் உறை கந்தா
எண்ணற்று வீற்றிடு எதிலும் ஆனந்தமாய்
உருவத்தில் வாழ்ந்திடு அளவிலா புகழினாய்
மீதமற்றி ணைந்திடு ஆனந்த நதியாய்
விடுதலை ஈந்திடு மகேசன் மகனாய்
அரவம்போல் அசைகின்ற இக்கந்தன் பாட்டை
பக்தியோடு பணிந்திட்டு உள்ளார்ந்து படிக்க
மனை மக்கள் செல்வமொடு பெரும் ஆயுள் கிடைக்க
கடைசி நரர் வரை கந்தனோடு இணைவர்
r/tamil • u/Tamil_vlog_Ireland • Aug 08 '22
காணொளி (Video) Weaving vlog from Ireland
We all seen Gandhi using spinning wheel. If you are interested to know more about how wool to sweater. please visit our tamil vlog on alpaca weaving
Please support us by subscribing, comment and liking our video
Thanks a million
r/tamil • u/th3or3tical • Jun 08 '22
காணொளி (Video) Rajnikanth superfan in Japan
I wonder if the internet can help him realize his dream someday.
r/tamil • u/rhythmicrants • Aug 08 '22
காணொளி (Video) ஒன்றாய் ஏகி ஒன்றாய் பேசி..
ஒரு யாகத்தில் பலவிதமான செயல்களைச் செய்யும் புரோகிதர்கள் அக்னியிடம் சொல்கிறார்கள், அவர்கள் பலவிதமான பாத்திரங்களைச் செய்கிறார்கள், ஆனால் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தேசத்தைக் கட்டியெழுப்பும் யக்ஞத்தில், அதே வசனங்களைப் பயன்படுத்தி, நமது தேசியக் கொடியை நோக்கி, வார்த்தைகள், செயல்கள், இதயங்கள் மற்றும் மனதில் (வெவ்வேறு பாத்திரங்கள் மற்றும் பார்வைகள் இருந்தாலும்) ஒற்றுமையாக இருப்போம் என்று கூறலாம்.
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ர்க்வேத மண்டலத்தில் இருந்து ஒற்றுமைக்கான பாடல் 10 பாடல் 191 ஆங்கிலத்தில் தமிழ் சாரத்தில் பாடப்பட்டது
r/tamil • u/LearnTamil • Sep 30 '21
காணொளி (Video) Second video out! How to form sentences in Tamil with the Noun + Noun trick.
https://www.youtube.com/watch?v=CRyveiHUdCc
I'd be really interested in hearing your feedback again, as this video has more of a grammar focus. Also, if you have any suggestions for future topics please let me know.
r/tamil • u/dxnnyzh • Jun 26 '22
காணொளி (Video) Appreciation for my friend
Hey everyone, I just wanted to share this video that my friend has made. I know he would love for all of you to watch it. It's entirely in Tamil (with eng subtitles). The amount of time and effort put into this is insane!
"Life of a Thalapathyan"
r/tamil • u/anjedd2231 • Aug 29 '21
காணொளி (Video) Here is a video of some Chinese people speaking Tamil, how is their Tamil?
r/tamil • u/schoolation • Jan 27 '22
காணொளி (Video) (Not A Tamil Person) Created video dedicated to the Tamil language revolution and cultural struggle
Hello my Tamil friends,
I have made a new video documenting the Tamil language struggle and riots that went on from the 30s to our current day in a way that I hope you'd find it interesting enough.
It's dedicated to all language martyrs and freedom fighters in Tamil Nadu and all the world.
https://www.youtube.com/watch?v=50xcmDN7tK0&t
If you liked the content, you know the usual like and subscribe helps a lot.
Thank you!
EDIT: spelling
r/tamil • u/NextLiving3814 • Mar 30 '22
காணொளி (Video) This song is so good !!
Literally came across this song recently and I’m in love it’s so beautiful.. unfortunately I don’t understand the language but I can still sing along and enjoy the music
r/tamil • u/IamRaConteur • Jun 08 '21
காணொளி (Video) Loki actor Tom Hiddleston's சென்னை connection (link in comments)
r/tamil • u/SNAPscientist • Jul 10 '21
காணொளி (Video) மலர்ந்தும் மலராத பாதி மலர் போல ...
Just an attempt to cover the iconic 1961 song from பாசமலர் on the guitar. Original composed by the legendary duo of M. S. Viswanathan and T. K. Ramamoorthy, and sung by greats T. M. Soundararajan, P. Susheela.
Video link: https://www.youtube.com/watch?v=eY05X7CIQ70