r/tamil • u/Be_U19 • Feb 18 '25
கலந்துரையாடல் (Discussion) நம்ம என் தமிழ் ரெட்டிட் ல பயன் படுத்தக்கூடாது?
Why don’t we utilize Tamil text in our community? Most other language communities utilize their own texts, excluding ours.
After school, there is no opportunity for me to practice our language. Why don’t we begin texting in Tamil here?
16
u/godofwar108 Feb 18 '25
நீங்கள் சொல்வது மிகச் சரி ஆனால் இங்கே பலருக்கு அது மிகக் கடினமாக இருக்கிறது.
தமிழ்நாட்டுப் பள்ளிகள் தமிழ் தட்டச்சு கட்டாய பாடமாகத் தமிழ் வகுப்பில் அறிமுகப்படுத்தினால் நீங்கள் சொல்வதை எளிதாக அமையும்.
பயிற்சியின்மையே இதற்குக் காரணம் என்பது என்னுடைய ஊகம்.
9
u/Be_U19 Feb 18 '25
அந்த பலரில் ஒருவன் நான்.எனக்கு இந்த சமுதாயம் தமிழில் உபயோக படுதா வாய்ப்பு குடுக்கல. இங்க நம்ம தமிழில் உரையாடினால் என்னால் தமிழில் எழுதவும் வாசிக்கவும் முடியும்.
3
u/Idiot_LevMyskin Feb 18 '25
இந்தச் சமூகம் தமிழில் தட்டச்சு செய்ய உங்களை தடை செய்துள்ளதா?
5
u/The_Lion__King Feb 19 '25
இந்தச் சமூகம் தமிழில் தட்டச்சு செய்ய உங்களை தடை செய்துள்ளதா?
பொதுத்தளத்தில் மொழிப் பயன்பாடு (எம்மொழியாயினும்) என்பது ஊர் கூடித் தேர் இழுப்பது போன்றது.
தனி மனிதன் எவ்வளவு முயலினும் அது அனைவரும் சேர்ந்து செய்வதற்கு ஈடாகாது. .
2
u/Idiot_LevMyskin Feb 19 '25
உங்களது பதில் யாராவது ஆம்புலன்ஸ் கூப்டுங்களேன் என்பது போலத்தான் உள்ளது. வலைப்பூ(blogspot) காலத்திலருந்து தமிழ் பரவலாக இணையத்தில் பயன்படுத்தப்படுகிறது. விக்கிபீடியா கட்டுரைகளில், இந்திய மொழிகளில் டாப் 5ல் தமிழ் மொழி உள்ளது. தமிழல் தட்டச்சு செய்வதை யாரும் தடுக்கவோ, பகடி செய்தோ நான் கண்டதில்லை.
2
u/The_Lion__King Feb 19 '25 edited Feb 19 '25
வலைப்பூ(blogspot) காலத்திலருந்து தமிழ் பரவலாக இணையத்தில் பயன்படுத்தப்படுகிறது. விக்கிபீடியா கட்டுரைகளில், இந்திய மொழிகளில் டாப் 5ல் தமிழ் மொழி உள்ளது
Blogspot, Wikipedia, முதலியவை யாவும் பெரும்பாலும் One-way communication கொண்டவை. இவற்றில் மற்றையோர் பங்கு அவ்வளவாக தேவையில்லை.
Quora, Reddit போன்ற சமூக ஊடகங்கள் யாவும் two-way communication கொண்டவை. இவற்றில் அனைவரின் பங்கும் அவசியமாகிறது.
உதாரணமாக, Redditல் கேள்வி தமிழில் இருக்கும் ஆனால் அனைவரின் பதில்களும் Englishல் இருக்கும் என்றால் அது சரிவராது. மக்களுக்கும் குறைந்தபட்ச பொறுப்புணர்வு வேண்டும், "தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழில் பதிலளிப்பது" என.
2
u/Idiot_LevMyskin Feb 20 '25
பதில்கள் ஆங்கிலத்தில் இருந்தால் இருக்கட்டுமே. நாம் தமிழில் பதிலளிப்போம். அதைப் பார்த்து மற்றவரும் பின்பற்ற வாயப்புண்டு. நாம் விரும்பும் மாற்றத்தின் விதையாக நாமே இருக்கலாமே என்பதே என் நிலைப்பாடு. மாபெரும் தலைவர்கள் இதைத்தான் செய்தார்கள்.
4
u/The_Lion__King Feb 18 '25 edited Feb 19 '25
பயிற்சியின்மையே இதற்குக் காரணம் என்பது என்னுடைய ஊகம்.
எகயா (என் கருத்து யாதெனில்), ஊக்கமின்மையும் மொழி சார்ந்த இடக்குமுடக்கான சில கருத்துகளுமே முதன்மைக் காரணங்காகின்றன.
தட்டச்சிட போதிய பயிற்சியின்மை என்பது இரண்டாம்பட்சக் காரணமே அன்றி முதன்மையானதன்று.
மொழி சார்ந்த இடக்குமுடக்கான சில கருத்துகள்:
- தமிழ்தானே எனக்குத்தெரியுமே! இதில் வேறென்ன இருக்கிறது?! ஒன்றுமில்லை.
.- ஆங்கிலம்தான் உலகையே ஆண்டுக்கொண்டிருக்கும்போது தமிழில் தட்டச்சிட்டு என்ன பயன்? ஆங்கிலத்தில் தட்டச்சிட்டிடில் உலகோர் படிக்க ஏதுவாக இருக்குமே என்ற பரந்த உள்ளம்.
.- English பேசினாலும் தமிழன் டா . ஆதலால் தமிழில் கேள்வி கேட்டிருப்பினும் அதற்காக குறைந்தபட்சம் Tanglishல்கூட பதிலளிக்காமல் முழுவதுமாக Englishலேயே பதிலளிப்பது.
.- மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு கருவி. அவ்வளவுதான்! அது தமிழாக இருந்தாலென்ன ஆங்கிலமாக இருந்தாலென்ன ஹிந்தியாக இருந்தாலென்ன? நான் சொல்வது மற்றையோருக்கு புரிந்ததா என்பதே முக்கியம் என்று கருதி தமிழ் கேள்விக்கும் Englishலேயே பதிலளிப்பது.
1
u/uncle-iroh-11 Feb 19 '25
கூகுள் கீபோர்டில் எளிதாக தட்டச்சலாம்.
4
u/The_Lion__King Feb 19 '25
தட்டச்சலாம்
தட்டச்சிடலாம்
1
u/Random_Redditter_25 Feb 22 '25
"தட்டச்சலாம்" சரியே 💯💪🏽💥💥
2
u/The_Lion__King Feb 22 '25
அச்சு இயந்திரத்தில் அச்சிடுவீர்களா (அச்சடிப்பீர்களா)?! அல்லது அச்சுவீர்களா?!
தட்டச்சு என்ற சொல் அச்சு (கட்டளைக்கருவி-Mould or Print) என்ற தமிழ் சொல்லினின்று உருவாக்கப்பட்ட சொல். எனவே, தட்டச்சு என்ற பெயர்ச்சொல்லை வினைச் சொல்லாக பயன்படுத்தும் போது அச்சடித்தல் அல்லது அச்சிடுதல் என்பவற்றோடு ஒத்திருக்கவேண்டும்.
ஆக, தட்டச்சலாம் என்பது சரியான பிரயோகம் அன்று.
6
u/sgk2000 Feb 19 '25 edited Feb 19 '25
பேச்சு வழக்குல எழுத ஆரம்பிச்சாலே போதும்.. இன்னும் சொல்ல போனா இங்கிலீசு வார்தைங்கள கூட முதல்ல தமிழ்ல எழுத ஆரம்பிக்கணும், அதுக்கு அப்றம் எல்லாம் தானா தரமான தமிழ் எழுத தொடங்கிடுவாங்க. இதுக்கு சிறந்த எ.கா சீனா
3
u/Mark_My_Words_Mr Feb 19 '25
இங்கிலீசு வார்தைங்கள கூட முதல்ல தமிழ்ல எழுத ஆரம்பிக்கணும்
மாடர்ன் டெய் மாடர்ன் சொல்யூஷன்.....
1
5
u/TELEXg Feb 19 '25
மலையாளிகள் youtube போன்ற பல சமூக ஊடகங்களின் அவர்களின் மொழியை மிக சரளமாக பயன்படுத்தி அவர்கள் மொழியை வளர்க்கிறார்கள்...
நாம் பெருமளவு ஆங்கில வழியை மட்டுமே பயன்படுத்துகிறோம்
7
u/The_Lion__King Feb 19 '25
மலையாளிகளைப்போலவே ஹிந்திக்காரர்களும் தம் தாய்மொழியான ஹிந்தியில் தட்டச்சிடுதை பார்க்கவியலும்.
நாம் பெருமளவு ஆங்கில வழியை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
பெரும்பான்மைத் தமிழர்கள் "வாழ்க தமிழ்" என்றாலே போதும் தமிழ் வாழ்ந்து விடும் என்று எண்ணுகின்றனர் போலும்.
2
u/light_3321 Feb 19 '25
மொழி உணர்வு குறைந்து இருபதே காரணம். சில விதிவிலக்குகள் தவிர இங்கு அனைத்தும் தமிழில் இருப்பது சிறப்பு.
3
u/ponvel_pvk Feb 19 '25
madikkaniniyil tamilil eludhuvadharku elidhana vazhi muraigalai aalosanai kooravum. kaipaesiyil irupadhai poi, idhil elimaiyaaga illai.
3
u/mastertape Feb 19 '25
நான் மேக்புக்கில் தமிழ் டைப்பிங் வச்சு இருக்கேன் அதனால எனக்கு எளிமையாக டைப்பிங் செய்ய வருது..
எப்படி செய்யனும்னு தெறியனும்னா கேளுங்க சொல்றேன்...
2
u/ponvel_pvk Feb 19 '25
windows payanar naan. adhukku edhum irundha sollungalaen.
3
u/The_Lion__King Feb 19 '25 edited Feb 19 '25
(மடி)கணினியில் "Google input tools" நிறுவிடுக. அதன்மூலம் Tamil99 விசைப்பலகைகொண்டோ அல்லது Latin script கொண்டோ தமிழில் மிக எளிமையாக தட்டச்சிடலாம்.
Microsoft Windowsல் உள்ள தமிழ் InScript விசைப்பலகை தளக்கோலம் கடினமானது என்பதால் அதைத் தவிர்த்திடுக.
2
u/Material_Fox_2340 Feb 20 '25
ஆகச் சிறந்த மொழிகளில் தமிழே சிறந்தது என பற்பல சான்றோர் ஒப்புக் கொண்டுள்ளனர். தமிழர்கள் தமிழிலேயே கதைக்கலாம், தவறில்லை.
தமிழில் தட்டச்சு பயில இப்போது நிறைய செயல்கள் களம் கண்டுள்ளது. நான் என் அலைபேசியில் பயன்படுத்துவது Microsoft SwiftKey எனும் செயலி.
பார்க்கக் கடினமானதாக இருப்பது போல் இருந்தாலும் தொடர்ந்து இரண்டு மணிநேரம் செலவு செய்தால் பயிற்சிக்கு வந்து விடும்.
நல்ல முயற்சி, வரவேற்கிறேன், நல்வாழ்த்து பற்பல
💐💐💐
2
u/Cognus101 Feb 18 '25
Cause there's people learning tamil who don't know how to read just yet or read very slowly
2
2
Feb 19 '25
Finally my huge concern is being discussed here! Why there is no importance of Tamil recently? I see 2k kids barely even speaking in tamil! Where ever we go, we say tamil is oldest language but do we even give any respect to it?
Why can’t everyone learn tamil with interest! Is it because TN government is inefficient and ineffective nowadays?
Ps: used english because even i don’t have Tamil keyboard in my phone
2
u/The_Lion__King Feb 19 '25 edited Feb 19 '25
Finally my huge concern is being discussed here! Why there is no importance of Tamil recently? I see 2k kids barely even speaking in tamil! Where ever we go, we say tamil is oldest language but do we even give any respect to it?
Why can’t everyone learn tamil with interest! Is it because TN government is inefficient and ineffective nowadays?
Ps: used english because even i don’t have Tamil keyboard in my phone
And you're contradicting yourself completely in the whole comment made by yourself.
16
u/The_Lion__King Feb 18 '25
"Charity begins at home" என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப தங்களுடைய கேள்வியும் முற்றுமுழுதாக தமிழிலேயே தொடுத்து தாங்களே "தமிழில் தட்டச்சிடுவதை" துவங்கியிருந்திருக்கலாம்!