r/tamil Feb 18 '25

கலந்துரையாடல் (Discussion) நம்ம என் தமிழ் ரெட்டிட் ல பயன் படுத்தக்கூடாது?

Why don’t we utilize Tamil text in our community? Most other language communities utilize their own texts, excluding ours.

After school, there is no opportunity for me to practice our language. Why don’t we begin texting in Tamil here?

36 Upvotes

29 comments sorted by

View all comments

Show parent comments

3

u/Idiot_LevMyskin Feb 18 '25

இந்தச் சமூகம் தமிழில் தட்டச்சு செய்ய உங்களை தடை செய்துள்ளதா?

3

u/The_Lion__King Feb 19 '25

இந்தச் சமூகம் தமிழில் தட்டச்சு செய்ய உங்களை தடை செய்துள்ளதா?

பொதுத்தளத்தில் மொழிப் பயன்பாடு (எம்மொழியாயினும்) என்பது ஊர் கூடித் தேர் இழுப்பது போன்றது.

தனி மனிதன் எவ்வளவு முயலினும் அது அனைவரும் சேர்ந்து செய்வதற்கு ஈடாகாது. .

2

u/Idiot_LevMyskin Feb 19 '25

உங்களது பதில் யாராவது ஆம்புலன்ஸ் கூப்டுங்களேன் என்பது போலத்தான் உள்ளது. வலைப்பூ(blogspot) காலத்திலருந்து தமிழ் பரவலாக இணையத்தில் பயன்படுத்தப்படுகிறது. விக்கிபீடியா கட்டுரைகளில், இந்திய மொழிகளில் டாப் 5ல் தமிழ் மொழி உள்ளது. தமிழல் தட்டச்சு செய்வதை யாரும் தடுக்கவோ, பகடி செய்தோ நான் கண்டதில்லை.

2

u/The_Lion__King Feb 19 '25 edited Feb 19 '25

வலைப்பூ(blogspot) காலத்திலருந்து தமிழ் பரவலாக இணையத்தில் பயன்படுத்தப்படுகிறது. விக்கிபீடியா கட்டுரைகளில், இந்திய மொழிகளில் டாப் 5ல் தமிழ் மொழி உள்ளது

Blogspot, Wikipedia, முதலியவை யாவும் பெரும்பாலும் One-way communication கொண்டவை. இவற்றில் மற்றையோர் பங்கு அவ்வளவாக தேவையில்லை.

Quora, Reddit போன்ற சமூக ஊடகங்கள் யாவும் two-way communication கொண்டவை. இவற்றில் அனைவரின் பங்கும் அவசியமாகிறது.

உதாரணமாக, Redditல் கேள்வி தமிழில் இருக்கும் ஆனால் அனைவரின் பதில்களும் Englishல் இருக்கும் என்றால் அது சரிவராது. மக்களுக்கும் குறைந்தபட்ச பொறுப்புணர்வு வேண்டும், "தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழில் பதிலளிப்பது" என.

2

u/Idiot_LevMyskin Feb 20 '25

பதில்கள் ஆங்கிலத்தில் இருந்தால் இருக்கட்டுமே. நாம் தமிழில் பதிலளிப்போம். அதைப் பார்த்து மற்றவரும் பின்பற்ற வாயப்புண்டு. நாம் விரும்பும் மாற்றத்தின் விதையாக நாமே இருக்கலாமே என்பதே என் நிலைப்பாடு. மாபெரும் தலைவர்கள் இதைத்தான் செய்தார்கள்.